Last Updated:

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

News18News18
News18

விடாமுயற்சி படத்திலிருந்து தனியே என்ற பாடலை பட குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் கடந்த ஆண்டு வெளியாக இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளி போய்க்கொண்டு இருந்தது. பொங்கலையொட்டி படம் வெளியாகும் என முன்பு தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் நாளை வெளியாகிறது. இதற்கான முதல் காட்சியை தமிழகத்தில் ஒன்பது மணி முதல் திரையிடப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் இடம்பெறும் தனியே என்ற பாடலை இன்று வெளியிட்டு இருக்கின்றனர்.

இதை பாடல் ஆசிரியர் மோகன் ராஜன் எழுத அனிருத் இசையமைத்து பாடியிருக்கிறார். மனைவியை பிரிந்து சோகத்தில் இருக்கும் கணவனின் பார்வையில் இந்த பாடல் எழுதப்பட்டிருக்கிறது. தனியே பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாள் இருமான இன்று மூன்றாவது பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.

இதையும் படிங்க – மதகஜராஜா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த விஷால்.. தொடர்ந்து நல்ல படங்களை வழங்குவதாக உறுதி

இதற்கிடையே கடந்த சில நாட்களாக ஆன்லைன் தளங்களில் விடாமுயற்சி படத்துடைய அட்வான்ஸ் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதே போன்று திரையரங்குகளில் நேரில் சென்று ரசிகர்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்து வருகின்றனர்.



Source link