Last Updated:
இந்த போட்டியில் இந்திய அணி வேகமாக ரன்கள் குவித்து வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
மும்பையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணி வேகமாக ரன்கள் குவித்து வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
13.2 ஓவர்கள் நிறைவு பெற்ற போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் குவித்திருந்தது. அபிஷேக் சர்மா 106 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
37 பந்துகளில் அபிஷேக் சர்மா சதம் அடித்து அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக 2 ஆம் இடத்தை பிடித்தார். 17 பந்துகளில் அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 35 பந்துகளில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர்
February 02, 2025 8:16 PM IST