Last Updated:
Tariffs | அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி எதிரொலியாக கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளும் வரி அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு புதிய வரி விதிப்பதாக அறிவித்தார். அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியும், சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 10 விழுக்காடு வரியும் விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இந்த புதிய வரிகள் அமெரிக்கக் குடும்பங்களுக்கே சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், அதை அதிபர் டிரம்ப் அமல்படுத்தினார். அமெரிக்காவில் சட்டவிரோதமான குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும் வரை புதிய வரிகள் அமலில் இருக்கும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகவும் மற்றும் எல்லைப் பாதுகாப்பிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் வரை கனடா மீதான வரிகள் தொடரும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவுக்கு எதிராக ஏதேனும் வரி விதிக்கப்பட்டால், அதற்கான பதிலடி கடுமையான மற்றும் சரியான காரணத்துடன் கூடிய உடனடி நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்பு எதிரொலியாக, கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை அறிவித்துள்ளது.
February 02, 2025 8:56 AM IST
Tariffs | அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு எதிரொலி.. அமெரிக்க பொருட்களுக்கு கனடா, மெக்சிகோ வரி அறிவிப்பு!