Last Updated:

பிரதமர் மோடி 13ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச உள்ளார். 10, 11 ஆம் தேதிகளில் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்கிறார்.

ட்ரம்ப் - மோடி (கோப்பு படம்)ட்ரம்ப் - மோடி (கோப்பு படம்)
ட்ரம்ப் – மோடி (கோப்பு படம்)

வரும் 13ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 10, 11 ஆம் தேதிகளில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன்பின் அங்கிருந்து வரும் 12 ஆம் தேதி அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. 13 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்கள் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டவிரோத குடியேற்ற விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

இதையும் படிங்க : குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது பேசு பொருளான நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் சந்தித்துப் பேசும் முக்கிய தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link