Last Updated:

Birth Right Citizenship Panic | அமெரிக்கா அல்லாத பிற நாட்டவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பது தடை செய்யும் சட்ட உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை இது என்பது குறிப்பிடத்தக்கது.

News18

பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பதில் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் டிரம்ப். அதில் அமெரிக்கா வாழ் இந்தியர்களை மிகவும் பாதித்த ஒன்று பிறப்புரிமை அடிப்படையில் இனி யாரும் அமெரிக்க குடியுரிமையை பெற முடியாது என்ற அறிவிப்பு தான். இந்த உத்தரவின் மூலம் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அங்கு குடியுரிமை கிடைக்காது என்பது தான்.

சி-செக்‌ஷன்: இந்திய கர்ப்பிணிகள் அவசரம்..

இதனால், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த நிலையில், புதிய சட்டம் அமலுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் அறுவை சிகிச்சை மூலம் கருவில் இருக்கும் குழந்தையை பெற்றெடுப்பதில் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர்.

Also Read: H1-B Visa: “திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம்”… இந்தியர்களுக்கு ட்ரம்ப் பம்பர் ஆஃபர்..!

7 மாதம் முதல் 9 மாதம் வரையிலான கர்ப்பிணி பெண்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனென்றால், பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தானாகவே அமெரிக்கக் குடியுரிமையைப் பெற மாட்டார்கள். இதனால் குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய கர்ப்பிணிகள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. இதற்கிடையே, நியூஜெர்சி நகரில் 7 மாத கர்ப்பிணி தனக்கு அறுவை சிகிச்சை மூலம் உடனே குழந்தை பிரசவிக்க வேண்டும் எனக்கூறி மருத்துவமனைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவசரம் காட்டும் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள்..

பிறப்புரிமை குடியுரிமை என்பது குழந்தைகளின் பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்கள் பிறந்த நாட்டின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டக் கொள்கையாகும். டெக்சாஸில் உள்ள மகப்பேறு மருத்துவரான டாக்டர் எஸ்.ஜி. முக்கலா கூறும்போது, பிரசவ காலத்திற்கு முன்பே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் வருவதாகவும், ஆனால், குறைப்பிரசவத்தின் அபாயங்கள், வளர்ச்சியடையாத நுரையீரல், குறைந்த பிறப்பு எடை மற்றும் நரம்பியல் சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துக்கூறி அவர்களை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறினார்.

மேலும், இது சாத்தியமானாலும் கூட, குறைப்பிரசவம் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், இதில் பல்வேறு சிக்கல்கள் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களில், இது தொடர்பாக 15 முதல் 20 தம்பதிகள் வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்க குடியுரிமை.. அதிபர் ட்ரம்ப் போட்ட முக்கிய உத்தரவு.. மருத்துவமனையில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!



Source link