Last Updated:

மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது ஏறத்தாழ ஒரு மாத காலம் வரை கடலிலேயே இருப்பார்களாம். கடலில் இருக்கும் போது அவர்களிடத்தில் இருக்கும் செல்போன்கள் செயல்படாது. அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பார்கள்” என நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

News18News18
News18

“மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது ஏறத்தாழ ஒரு மாத காலம் வரை கடலிலேயே இருப்பார்களாம். கடலில் இருக்கும் போது அவர்களிடத்தில் இருக்கும் செல்போன்கள் செயல்படாது. அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பார்கள். இதையெல்லாம் கேட்ட பிறகு இன்ஸ்பிரேஷன் ஆகி இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தயார் செய்து கொள்ள தொடங்கினேன்” என நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

நாக சைதன்யா – சாய் பல்லவி நடித்துள்ள ‘தண்டேல்’ திரைப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படம் தொடர்பாக அண்மையில் நாக சைதன்யா அளித்த பேட்டியில், “சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. என் வாழ்க்கை இங்கு தான் தொடங்கியது. சென்னையில் எனக்கு மறக்க முடியாத அனுபவம் நிறைய உள்ளது.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் அனைத்து கமர்ஷியல் அம்சங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு காதல் கதை. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை பார்க்கும் ரசிகர்களும் இந்த காதலை நெருக்கமாக உணர்வார்கள். இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தின் திரை தோற்றம் குறித்து இயக்குநர் சந்து என்னை சந்தித்தபோது விவரித்தார்.

அதைக் கேட்டவுடன் நடிகருக்கு தன் திறமையை வெளிப்படுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம் என நம்பினேன். படத்தின் கதையும் விசாகப்பட்டினத்தில் அருகே உள்ள ஸ்ரீகாகுளத்திலிருந்து பயணித்து, குஜராத்திற்கு சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்குள்ள சிறைக்கு சென்று, அதன் பிறகு சொந்த மண்ணுக்கு திரும்புவது போன்ற நீண்ட பயணம். இது என்னை மிகவும் கவர்ந்தது.

அதன் பிறகு ஸ்ரீகாகுளத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறை- மொழி உச்சரிக்கும் பாணி- உடல் தோற்றப் பாணி- தொழில் சார்ந்த பாணி- ஆகியவற்றை குறித்து அவர்களிடம் உரையாடி தெரிந்து கொண்டேன்.

கடலுக்கு போகும் போது அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? அதனை எப்படி எதிர்கொள்வார்கள்? இதைப்பற்றியெல்லாம் விரிவாக கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும்போது ஏறத்தாழ ஒரு மாத காலம் வரை கடலிலேயே இருப்பார்களாம். கடலில் இருக்கும் போது அவர்களிடத்தில் இருக்கும் செல்போன்கள் செயல்படாது. அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பார்கள்.

இதையெல்லாம் கேட்ட பிறகு இன்ஸ்பிரேஷன் ஆகி இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தயார் செய்து கொள்ள தொடங்கினேன். இது என்னுடைய திரையுலக பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. என்னுடைய தோற்றமாகட்டும்… என்னுடைய உடல் மொழியாகட்டும்… என்னுடைய உள்ளூர் பேச்சு வழக்கு வசன உச்சரிப்பாகட்டும்… கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இதிலேயே லயித்திருந்தேன். இந்தப் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது.

‘தண்டேல்’ படத்தில் நான் நடித்த ராஜு கதாபாத்திரம் என்னை பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்பான அத்தனை உணர்வுகளும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது ஏற்பட்டது. மனிதர்களிடத்தில் பேரன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று என்பதையும் உணர்த்தியது” என தெரிவித்துள்ளார்.



Source link