Last Updated:
சாம்சங் நிறுவனம் பட்ஜெட்டுக்கு ஏற்ற 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி A06, கேலக்ஸி F06, கேலக்ஸி F16 மற்றும் கேலக்ஸி M16 ஆகியவை அடங்கும்.
சாம்சங் நிறுவனம் பட்ஜெட்டுக்கு ஏற்ற 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி A06, கேலக்ஸி F06, கேலக்ஸி F16 மற்றும் கேலக்ஸி M16 ஆகியவை அடங்கும்.
சாம்சங் நிறுவனத்தின் இந்த நான்கு ஸ்மார்ட்போன்களின் சப்போர்ட் பேஜ்கள் சாம்சங் இந்தியாவின் இணையதளத்தில் நேரலையில் வந்துள்ளன. இதிலிருந்து சாம்சங் நிறுவனம் விரைவில் இந்த ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது என்பது தெளிவாகிறது. இந்த நான்கு ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் குறித்த விரிவான தகவல்களைப் பற்றி பார்ப்போம்.
கேலக்ஸி A06 மாடல் எண் SM-A066B/DS ஆக இருக்கும் என்பதை சாம்சங்கின் சப்போர்ட் பேஜ் வெளிப்படுத்துகிறது. அதேசமயம், கேலக்ஸி F06 இன் மாடல் எண் SM-E066B/DS ஆகவும், கேலக்ஸி F16 இன் மாடல் எண் SM-E166P/DS ஆகவும் மற்றும் கேலக்ஸி M16 இன் மாடல் எண் SM-M166P/DS ஆகவும் இருக்கும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த போன்கள் அனைத்தும் சில நாட்களுக்கு முன்பு BIS என்ற இந்திய இணையதளத்தில் காணப்பட்டன.
கூடுதலாக, கேலக்ஸி A06 மற்றும் கேலக்ஸி F06 ஆகியவை 2G, 3G, 4G LTE மற்றும் 5G இணைப்புக்கான ஆதரவையும், புளூடூத் மற்றும் WLAN அம்சங்களை ஆதரிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது.சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்ஸி A06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, நிறுவனத்தின் A-சீரிஸின் கீழ் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Geekbench இணையதளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 OS மூலம் இயங்குகிறது மற்றும் 4 ஜிபி ரேம் உடன் வருகிறது என்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. இதனுடன், மீடியாடெக் டைமன்சிட்டி 6300 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது என்று சிப்செட் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. சாம்சங்கின் இந்த பட்ஜெட் போனின் செயல்திறனைப் பற்றி பேசுகையில், இது சிங்கிள் கோரில் 731 மதிப்பெண்களையும் மற்றும் மல்டி கோரில் 1,816 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. கேலக்ஸி F06 ஆனது ஏறக்குறைய கேலக்ஸி A06 போன்ற அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், கேலக்ஸி F16 மற்றும் கேலக்ஸி M16 ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில், இந்த இரண்டு போன்களும் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி A16 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும். Geekbench பட்டியலின் படி, இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 OS, 8GB ரேம் மற்றும் மீடியாடெக் டைமென்ஷன் 6300 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது கேலக்ஸி A16 இன் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருந்தால், இது 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 6300 சிப்செட், 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா, 13 மெகாபிக்சல் ஃபிரன்ட் கேமரா மற்றும் 5000mAh பேட்டரி மற்றும் டூயல்-பேண்ட் Wi-Fi (2.4GHz மற்றும் 5GHz) க்கான ஆதரவை கொண்டிருக்கலாம்.
கேலக்ஸி A06 இன் 4G வேரியண்ட் ஆனது செப்டம்பர் 2024 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் மீடியாடெக் ஹீலியோ G85 சிப்செட், 25W சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் டூயல்-ரியர் கேமரா செட்அப் ஆகியவை இடம்பெற்றுள்ளன. விலை மற்றும் வெளியீட்டு தேதிகள் குறித்து தெளிவான தகவல் ஏதும் இல்லை என்றாலும், விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
January 31, 2025 5:17 PM IST