Last Updated:
இரண்டாவது முறையாக இந்திய மகளிர் ஜூனியர் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உலகக் கோப்பை வென்றுள்ள இந்திய மகளிர் ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு நீடா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 82 ரன்கள் மட்டுமே எடுத்தது.
83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 11.2 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி உலக கோப்பையை வென்றது. கடந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை ஜூனியர் டி20 கிரிக்கெட் தொடரையும் இந்திய அணி வென்றிருந்தது.
அந்த வகையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய மகளிர் ஜூனியர் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளருமான நீடா அம்பானி இந்திய மகளிர் ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்று இந்திய மகளிர் ஜூனியர் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. என்ன ஒரு அற்புதமான வெற்றி இது! உங்கள் திறமை, ஆர்வம், திறமை மற்றும் கடின உழைப்பு எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது.
இந்தியாவும், இந்திய விளையாட்டும், இந்தியப் பெண்களும் நிஜமாகவே தடுத்து நிறுத்த முடியாதவர்கள் என்பதை உலகுக்குக் காட்டியுள்ளீர்கள். உங்கள் வெற்றி பயணங்கள் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். தொடர்ந்து பிரகாசிக்கவும்! என்று தெரிவித்துள்ளார்.
February 03, 2025 4:27 PM IST