Last Updated:
வாஷிங்டன் சுந்தர் தனது சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடுவார் என்பதாலும், அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க இந்தியா முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிரடி இந்திய ஓபனிங் பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மா, காயம் காரணமாக, இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வலைப்பயிற்சியின்போது அவருக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நொண்டிச் செல்வதை காண முடிந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில், 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார் அபிஷேக் ஷர்மா. இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்ததும் இவர் தான். மேலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் மட்டுமே சிறப்பு பேட்ஸ்மேன்களாக இருந்தனர்.
இதையும் படிக்க: தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. பஞ்சாபில் நடந்தது என்ன? அணியின் மேலாளர் விளக்கம்
ஆனால் அபிஷேக் ஷர்மா காயம் காரணமாக அவதிப்படுவதால், அணி வேறு ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. 3ஆவது ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லாததால், அணியில் துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் அல்லது திலக் வர்மா ஆகியோரில் ஒருவர் ஓப்பனராக களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
அபிஷேக் ஷர்மா காயம் காரணமாக வலியால் துடித்ததாகவும், உடற்பயிற்சி நிபுணரால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், அவர் அருகிலுள்ள எம்.ஏ.சி. பி மைதானத்திற்கு நடந்து சென்றதாகவும், ஆனால் பேட்டிங் செய்ய வரவில்லை என்றும், வலைப்பயிற்சியின் போது அவர் நொண்டிச் செல்வதை காண முடிந்தது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் போட்டியில் விளையாட முடியாமல் போனால், இந்தியாவுக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமையும். வாஷிங்டன் சுந்தர் இடதுக்கை ஆட்டக்காரர் என்பதாலும், தனது சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடுவார் என்பதாலும், அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க இந்தியா முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முகமது ஷமி உடற்தகுதியுடன் இருந்தும், அணி சேர்க்கை காரணமாக ஈடன் கார்டனில் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. அர்ஷ்தீப் சிங் என்ற ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரை மட்டுமே அணியில் வைத்திருக்க அணி நிர்வாகம் விரும்பியதாகவும், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகிய மூன்று ஆல்ரவுண்டர்களையும் விளையாட வைத்ததாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai,Tamil Nadu
January 25, 2025 1:00 PM IST