Last Updated:
Flower Prices| விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.2500- 3000 க்கும் , ஜாதிமல்லி கிலோ ரூ.1400 -2000க்கும் விற்பனையாகிறது.
விழுப்புரத்தில் வரத்து குறைவினாலும், அடுத்தடுத்து முகூர்த்த தேதிகளாலும், ஜாதிமல்லி கிலோ மூவாயிரத்திற்கும் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் நகரப்பகுதியான பூந்தோட்டம் பகுதியில் உள்ள மலர் சந்தையில் வியாபாரிகள், திண்டிவனம், பாண்டிச்சேரி, மயிலம், போன்ற பல பகுதிகளிலிருந்து பூக்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பூ சந்தையில் வரத்து குறைவு, முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்களும் வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.2500- 3000க்கும் , ஜாதிமல்லி கிலோ ரூ.1400 -2000க்கும் விற்பனையாகிறது. காக்கட்டான் 950க்கும், முல்லை அரும்பு ரூ.2000க்கும், கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.200, சாமந்தி ரூ.240 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மழை பாதிப்பினால் பூச்செடிகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதால் பூக்களின் விலை அதிகரிப்பிற்கு காரணம் என்றும் அரை கிலோ பூக்கள் வாங்கி சென்றவர்கள் 100, 200 கிராம் மட்டுமே வாங்கி செல்வதாக பூ வியாபாரி ரகு தெரிவித்தார். மேலும் அடுத்தடுத்த தை மாதம், முகூர்த்தங்கள் அதிகரித்து வருவதால் வருகின்ற நாட்களிலும் பூக்கள் விலை சற்று அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
January 30, 2025 6:11 PM IST