வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ரயில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் ஆலோசனைக்கமைய ரயில் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவரும் வகையில், இரவுநேர ரயில் சேவை இன்று கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

 



Source link