Last Updated:

கேலக்ஸி எஸ்25, எஸ்25+ மற்றும் எஸ்25 அல்ட்ரா உள்ளிட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் சமீபத்தில் (கடந்த ஜனவரி 22) கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள கேலக்ஸி அன்பேக்ட் ஈவன்ட்டில் இடம்பெற்றது.

News18News18
News18

கேலக்ஸி எஸ்25, எஸ்25+ மற்றும் எஸ்25 அல்ட்ரா உள்ளிட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் சமீபத்தில் (கடந்த ஜனவரி 22) கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள கேலக்ஸி அன்பேக்ட் ஈவன்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஜனவரி 23 முதல் இந்த சீரிஸ் டிவைஸ்களுக்கான ப்ரீ-ஆர்டர் துவங்கியது. இந்த சீரிஸில் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25+, மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஆகிய மாடல்கள் அடக்கம். இதனிடையே வாடிக்கையாளர்கள் அனுபவிக்கக்கூடிய சில ப்ரீ-ஆர்டர் பெனிஃபிட்ஸ் குறித்து சாம்சங் நிறுவனம் தற்போது விவரமாக கூறி இருக்கிறது. கேலக்ஸி எஸ்25 சீரிஸ் போன்கள் Galaxy SoC-க்காக குவால்காம் நிறுவனத்தின் லேட்டஸ்ட் Snapdragon 8 Elite ப்ராசஸரால் இயக்கப்படுகின்றன மற்றும் Android 15-அடிப்படையிலான One UI 7-ல் இயங்கும்.

ப்ரீ-ஆர்டர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் Galaxy S25 Ultra-வை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.21,000 மதிப்புள்ள சலுகைகளை பெறலாம் என்று நிறுவனம் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது. ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் 12GB + 256GB வேரியன்ட்டின் விலையிலேயே 12GB + 512GB ஆப்ஷனை பெற கூடிய வகையில் ஸ்டோரேஜ் அப்கிரேடை பெற முடியும்.

தவிர ப்ரீ-ஆர்டர் செய்பவர்கள் ரூ.9,000 அப்கிரேட் போனஸ் மற்றும் ரூ. 7,000 கேஷ்பேக் சலுகைகளையும், ஒன்பது மாத கட்டணமில்லா EMI ஆப்ஷனையும் பெறலாம். இந்தியாவில் சாம்சங் Galaxy S25 Ultra மாடலின் 12GB + 256GB வெர்ஷனின் விலை ரூ.1,29,999-ல் தொடங்குகிறது, அதே நேரம் இந்த மாடலின் 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ் வேரியன்ட்ஸ்களின் விலைகள் முறையே ரூ.1,41,999 மற்றும் ரூ.1,65,999-க்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.

மேலும் Galaxy S25+-ஐ ப்ரீ-ஆர்டர் செய்பவர்கள் ரூ.12,000 மதிப்புள்ள சலுகைகளை பெறலாம் என்று சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் ஸ்டோரேஜ் அப்கிரேட் நன்மையையும் பெறலாம், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 256GB ஸ்டோரேஜ் வெர்ஷனின் விலையில் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட டிவைஸை பெறலாம். இந்த மாடலின் 256GB மற்றும் 512GB வேரியன்ட்ஸ்கள் இரண்டும் 12GB ரேம் ஆப்ஷனுடன் கிடைக்கின்றன, மேலும் இவற்றின் விலைகள் முறையே ரூ.99,999 மற்றும் ரூ. 1,11,999 ஆகும். Galaxy S25 சீரிஸின் அனைத்து மாடல்களும் தற்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாக ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கின்றன. கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடல் கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்புடன் கூடிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.



Source link