Last Updated:

Chennai Super Kings | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு யாரை விக்கெட் கீப்பராக களமிறக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தோனி

கடந்த வாரம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் திறமை வாய்ந்த முன்னணி வீரர்களை அணியினர் போட்டி போட்டுக்கொண்டு அதிக விலைக்கு ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதேபோல் இளம் வீரர்களும் அதிகளவில் ஏலம் எடுக்கப்பட்டனர்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஏலத்தில் பல இளம் வீரர்களை எடுத்துள்ளது. தற்போது அந்த அணியில் முக்கிய விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி இருந்து வரும் நிலையில் அவருக்கு அடுத்தபடியாக அல்லது அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பரை எடுக்க வேண்டியது அணிக்கு அவசியமாக இருந்தது.

தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா? 

குறிப்பாக தோனி வரும் சீசனில் விளையாடுவது உறுதி என்றாலும் எப்போது ஓய்வை அறிவிப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. எனவே தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர் ஆக இருக்கும் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவைப்பட்டார். எனவே இந்த முறை அதிக இளம் வீரர்கள் மட்டுமின்றி, விக்கெட் கீப்பர்களையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: கிரிக்கெட் வருமானம்: நம்பர் 1 இடத்தை இழந்த கோலி – முந்தியது யார் தெரியுமா?

தோனிக்கு பிறகு யார்?

இந்நிலையில் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக யாரை நியமிக்கலாம் என சென்னை அணி நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பர்களாக தோனி மற்றும் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே மட்டுமே உள்ளனர். எனவே சென்னை அணிக்கு தோனி இல்லாத பட்சத்தில் கான்வேயை கீப்பராக பயன்படுத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



Source link