Last Updated:

மிடில் கிளாஸ் குடும்பத்தின் கனவுகளை சுமந்து வரும் இந்த திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்

படத்தின் போஸ்டர்படத்தின் போஸ்டர்
படத்தின் போஸ்டர்

சித்தார்த் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 3BHK என தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

நடிகர் சித்தார்த் தற்போது 8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருடன் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்திற்கு 3 BHK என தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே நாம் கூறி இருந்தோம். அதை தற்போது டீசரை வெளியிட்டு படத்தின் தலைப்பை படக்குழுவினர் உறுதி செய்திருக்கின்றனர்.

மிடில் கிளாஸ் குடும்பத்தின் கனவுகளை சுமந்து வரும் இந்த திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர். சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான  பெரிய பட்ஜெட் படமாக இந்தியன் 2 திரைப்படம்  அமைந்தது.

இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் அடுத்தடுத்த படங்களில் சித்தார்த் பிஸியாகி விட்டார். 8 தோட்டாக்கள் திரைப்படம் வர்த்தகம் மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க – பாக்ஸ் ஆபிசை அதிரவைத்த மதகஜராஜா.. இந்திய திரையுலகமே வியந்தது ஏன் தெரியுமா?

அதனால் 8 தோட்டாக்கள் பட இயக்குனர் இயக்கும் படம் என்பதால் 3BHK படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



Source link