Last Updated:

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னை பார்க்க வந்த ஜப்பான் ரசிகர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.

News18News18
News18

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னை பார்க்க வந்த ஜப்பான் ரசிகர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.

விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு மறுபுறம் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், மாவட்டங்களுக்கான கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார். 234 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

இதுவரை 3 கட்டங்களாக 57 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயின் பனையூர் அலுவலகத்தில் பொறுப்பாளர்களை சந்திக்கும் நிகழ்வின்போது, விஜயின் ரசிகர்கள் சிலர் ஜப்பானிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். பனையூர் அலுவலகத்துக்கு வந்த அவர்களை நேரில் சந்தித்த விஜய், அவர்களுடன் கைகுலுக்கி வரவேற்றார்.

பின்னர் சால்வை அணிவித்து அவர்களை கௌரவித்தார். தொடர்ந்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இதனால் அந்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.



Source link