Last Updated:
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் V.நடராஜன் உடல்நலக்குறைவால் 70 வயதில் காலமானார். ‘சின்ன கவுண்டர்’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். திரையுலகினர் இரங்கல்.
விஜயகாந்த் நடித்த ‘சின்ன கவுண்டர்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த வி.நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்தவர் ஆனந்தி பிலிம்ஸ் V.நடராஜன். ‘சின்ன கவுண்டர்’, ‘முள்ளும் மலரும்’, ‘உத்தம புருஷன்’, ‘ராஜா கைய வச்சா’, ‘தர்மசீலன்’, ‘பங்காளி’, ‘பசும்பொன்’, ‘நதியைத் தேடி வந்த கடல்’, ‘கலியுகம்’ போன்ற திரைப்படங்களை தயாரித்தவர்.
இயக்குநர் மகேந்திரனை திரையுலகில் தனது தயாரிப்பின் மூலம் அறிமுகப்படுத்தினார் நடராஜன். பாரதிராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார் நடராஜன். திடீரென நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் காலமானார். அவருக்கு வயது 70. நடராஜனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
February 01, 2025 7:15 PM IST