Last Updated:

தெலங்கானா உயர்நீதிமன்றம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரவு 11 மணிக்கு பிறகும் பகல் 11 மணிக்கு முன்பும் திரையரங்குகளில் படம் பார்க்க தடை விதித்துள்ளது.

News18

தெலங்கானாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரவு 11 மணிக்கு பிறகும் பகல் 11 மணிக்கு முன்பும் திரையரங்குகளில் படம் பார்க்க அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரியும், அதிகரிக்கும் திரையரங்க டிக்கெட் கட்டணம் தொடர்பாகவும் மனு ஒன்று தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விஜயசென் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகாலை மற்றும் நள்ளிரவில் சினிமா பார்க்க வெளியே செல்வது உடல்நலனை பாதிக்கும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது உண்மைதான் என கூறினார்.

இதையும் வாசிக்க: Siragadikka Aasai | ரோகிணிக்கு பேய் ஓட்டும் விஜயா… பீதியில் மனோஜ்..!

குழந்தைகளை இரவு 11 மணிக்கு பிறகும், பகல் 11 மணிக்கு முன்பும் படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு திரையிடலின் போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் அல்லு அர்ஜுனைக் காண கூட்டம் முந்தியடித்ததால், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது குழந்தை மூளைச்சாவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link