Last Updated:
மத்திய பட்ஜெட் ஆவணங்களை அரசின் இணையதளமான http://www.indiabudget.gov.in./ என்பதிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருக்கும்.
மத்திய பட்ஜெட் 2025-26 யை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பட்ஜெட்டை, டிவி சேனல்களில் நேரலையாக பார்க்கலாம்.
இதேபோன்று, இணையதளம் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும் நேரலையாக பார்ப்பதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு குறித்து அறிவிப்புகள் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
சமூக நலத்திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வருமானத்தை பெருக்கக் கூடிய புதிய வழிகள், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
இதே போன்று, ஜிஎஸ்டி மாறுதல் குறித்த அறிவிப்பை வணிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளார்கள். இன்சூரன்ஸ் தொழில்நுட்பம், சுகாதாரத் துறை ஆகியவற்றிலும் பயன்பாட்டை இன்னும் எளிமைப்படுத்தும் வகையில் அறிவிப்புகளை துறை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நுகர்வோருக்கு பயன் அளிக்கும் வகையில் வரவிருக்கும் பட்ஜெட் அமையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 1 சனிக்கிழமை காலை 11 மணியளவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மக்களவையில் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பிப்பார்.
இதனை அரசு சேனல்களான தூர்தர்ஷன், சன்சாத் டிவி ஆகியவை நேரலையாக ஒளிபரப்பு செய்கின்றன. அதனை தவிர்த்து, அரசின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களிலும் மத்திய பட்ஜெட் நேரலை செய்யப்படுகிறது. இதே போன்று, மத்திய பட்ஜெட் ஆவணங்களை அரசின் இணையதளமான http://www.indiabudget.gov.in./ என்பதிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பட்ஜெட் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருக்கும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ளது. அதன் பின்னர் தாக்கல் செய்யப்படக்கூடிய முதல் பட்ஜெட் இதுவாகும்.
January 28, 2025 6:48 PM IST
Budget 2025 Live : மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படுவதை நேரலையில் பார்க்கலாம்.. எந்த சேனலில் தெரியுமா?