Last Updated:

ரியல்மீ 14 ப்ரோ 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.24,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மறுபுறம், போகோ X7 ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 21,999 ஆகும்.

News18

இந்தியாவில் ரியல்மீ 14 ப்ரோ சீரிஸ் மற்றும் போகோ X7 சீரிஸ் உட்பட பல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரியல்மீ 14 ப்ரோ மற்றும் போகோ X7 ஆகியவை சமீபத்திய நாட்களில் அதிகம் பேசப்பட்ட ஸ்மார்ட்போன்களில் முக்கியமானவை. இதில் கண்கவர் அம்சங்கள் உள்ளன. எனவே, நீங்கள் ரூ.25,000 க்கு கீழ் உள்ள சமீபத்திய ஸ்மார்ட்போன்களைத் தேடுகிறீர்கள் என்றால், போகோ X7 மற்றும் ரியல்மீ 14 ப்ரோ ஆகியவை சரியான தேர்வாக இருக்கலாம். சிறந்த புரிதலைப் பெற, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையிலான ஒப்பீட்டை இங்கு காணலாம்.

ரியல்மீ 14 ப்ரோ vs போகோ X7: விலை

ரியல்மீ 14 ப்ரோ 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.24,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மறுபுறம், போகோ X7 ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 21,999 ஆகும்.

ரியல்மீ 14 ப்ரோ vs போகோ X7: வடிவமைப்பு

ரியல்மீ 14 ப்ரோ மற்றும் போகோ X7 மாடல்கள் மிகவும் மாறுபட்ட வடிவமைப்புடன் வருகின்றன. ரியல்மீ 14 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கும் வகையில் “வண்ணத்தை மாற்றும் பின்புற பேனலைக்” கொண்டுள்ளது. இது IP69, IP68 மற்றும் IP69 மதிப்பீட்டை வழங்குவதால் மிகவும் நீடித்தது. மறுபுறம், போகோ X7 சதுர வடிவ கேமரா செட்அப்பை கொண்ட பிளாஸ்டிக் பின்புற பேனலுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ 14 ப்ரோ மாடலை விட ரூ. 4000 மலிவானதாக இருந்தாலும் IP66 + IP68 + IP69 மதிப்பீட்டையும் வழங்குகிறது. ரியல்மீ 14 ப்ரோ 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 4500nits வரை பிரைட்னசுடன் 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதேசமயம், போகோ X7 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 3000nits வரை பிரைட்னசுடன் 6.67-இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

ரியல்மீ 14 ப்ரோ vs போகோ X7: செயல்திறன் மற்றும் பேட்டரி

சக்திவாய்ந்த செயல்திறனுக்காக, ரியல்மீ 14 ப்ரோ 8GB RAM மற்றும் 256GB வரை ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட MediaTek Dimensity 7300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மறுபுறம், போகோ X7 8GB RAM உடன் இணைக்கப்பட்ட MediaTek Dimensity 7300 அல்ட்ரா செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது வேகமான மற்றும் நீடித்த செயல்திறனை வழங்குகிறது. இரண்டு சாதனங்களும் மேம்பட்ட கிராஃபிக் செயல்திறனுக்காக Mali-G615 GPU உடன் வருகின்றன.

நீடித்த செயல்திறனுக்காக, ரியல்மீ 14 ப்ரோ 45W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. அதேசமயம், போகோ X7 5500mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது, இது 45W சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. எனவே, போகோ X7 மாடலை விட ரியல்மீ நீண்ட பேட்டரி ஆயுளை வழங்க முடியும்.

ரியல்மீ 14 ப்ரோ vs போகோ X7: கேமரா

கேமரா அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மீ 14 ப்ரோ இரட்டை கேமரா அமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் Sony IMX882 சென்சார் கொண்ட 50MP OIS பிரதான கேமராவை கொண்டுள்ளது.

மறுபுறம், போகோ X7 ஆனது Sony LYT-600 சென்சார் கொண்ட 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, ரியல்மீ 14 ப்ரோ 16MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது, மேலும் போகோ X7 20MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது.



Source link