Last Updated:

தயாரிப்பு நிறுவனத்துக்கு இருந்த சிக்கலால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

News18News18
News18

மதகஜராஜா படத்துடைய வெற்றி தமிழ்நாட்டை மட்டும் இன்றி இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகாமல் இருக்கும் பல படங்களுக்கு உத்வேகம் கொடுப்பதாக அமைந்துள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு திரைக்கு வர இருந்த படம் ‘மகாராஜா’. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், சோனு சூட், மணிவண்ணன், மனோபாலா, சடகோபன் ரமேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

விஜய் ஆண்டனி படத்துக்கு இசையமைத்திருந்தார். தயாரிப்பு நிறுவனத்துக்கு இருந்த சிக்கலால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சந்தானத்தின் நகைச்சுவையும், இரண்டாம் பாதியில் மனோபாலாவின் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தன. இதனால் படம் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து படத்தை தெலுங்கில் வெளியிட திட்டமிட்டு, கடந்த 31-ம் தேதி தெலுங்கு பேசும் மாநிலங்களில் படம் வெளியானது.

ஆனால் படம் பெரிய அளவில் அங்கு வரவேற்பை பெறவில்லை. அதன்படி, முதல் நாளில் இப்படம் ரூ.40 லட்சம் வசூல் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளில் ரூ.30 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. மொத்தமாக படம் ரூ.1 கோடி வசூலைக் கூட நெருங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பது இந்திய திரை உலகை வியப்படைய செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியானது தான்.

இதையும் படிங்க – Vidaamuyarchi : இந்தியன் 2 ரிக்கார்டை முறியடித்த விடாமுயற்சி.. டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பு

இந்த படத்துடைய வெற்றி இன்னும் வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் போன்ற அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. மேலும் இந்தி மொழியிலும் பல நல்ல திரைப்படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. அதன் தயாரிப்பாளர்களுக்கும் மதகஜராஜா நம்பிக்கையை கொடுத்திருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த வகையில் மதகஜராஜா படத்துடைய வெற்றி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.



Source link