Last Updated:

பிரபல ஸ்மார்ட் ஃபோன் பிராண்டாக உருவெடுத்துள்ள நத்திங் நிறுவனம் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இதற்கு காரணம் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் ஃபோன் வெளியீடு விரைவில்

News18News18
News18

பிரபல ஸ்மார்ட் ஃபோன் பிராண்டாக உருவெடுத்துள்ள நத்திங் நிறுவனம் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இதற்கு காரணம் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் ஃபோன் வெளியீடு விரைவில் நடக்கவிருக்கிறது. பார்சிலோனாவில் நடைபெற உள்ள MWC 2025-ல் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பை வெளியிட உள்ளது குறித்து உறுதிப்படுத்தியுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள MWC 2025 ஈவன்ட்டில் தொடர்ச்சியாக தொலைபேசிகள் அல்லது ஒரு பெரிய தயாரிப்புகள் வெளியிடப்படுவதை நாம் காணலாம். இதனிடையே நிறுவனம் சோஷியல் மீடியாக்களில் தகவலை வெளியிட்டு அறிமுகப்படுத்த உள்ள புதிய தயாரிப்பு மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது.

அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதம் 3-ஆம் தேதி துவங்கி மார்ச் 6-ஆம் தேதி வரை பார்சிலோனாவில் MWC 2025 ஈவன்ட் நடைபெற உள்ள நிலையில் நத்திங் போன் சீரிஸ் வெளியீட்டின் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவலின்படி மார்ச் 4-ஆம் தேதி நத்திங் போன் சீரிஸ் வெளியீடு இருக்கிறது. இந்த சீரிஸில் மொத்தம் எத்தனை போன்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.?

மார்ச்சில் நடைபெற உள்ள நத்திங் போன் வெளியீட்டு நிகழ்வு… என்ன எதிர்பார்க்கலாம்!

பார்சிலோனாவில் நடைபெற உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) ஈவன்ட்டில் வரும் மார்ச் 4-ஆம் தேதி புதிய நத்திங் போன் வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் என தெரிகிறது. இந்த ஈவன்ட்டில் அறிவிக்கப்படும் அல்லது வெளியிடப்டும் தயாரிப்புகளின் பெயரை நத்திங் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டிருக்கும் ஒரு ப்ராடக்ட் டீஸர், குறிப்பிட்ட தேதியில் நத்திங் வெளியிடப்படும் மாடல் Phone 3a-ஆக இருக்கும் என்பதை குறிக்கிறது.

பிரபல டிப்ஸ்டரான யோகேஷ் பிரார், நத்திங் நிறுவனம் Phone 3-ஐ உருவாக்கி வருவதாகவும், 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறி இருக்கிறார். இதனிடையே அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ள இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ்-ல் இயங்க கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Phone 3 சீரிஸில் வெளியாகவிருக்கும் மாடல்களுக்கு குவால்காம் மற்றும் மீடியாடெக் சிப்செட்களை நிறுவனம் பயன்படுத்தப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகமாக உள்ள Phone 3 ஒரு ஃபிளாக்ஷிப் தொலைபேசியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வரும் மார்ச் 4-ஆம் தேதி நிறுவனம் எத்தனை போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய தகவல் இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் தற்போது வரை வெளியாகி இருக்கும் தகவல்களும், டீஸர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட போன்களை நிறுவனம் அறிமுகப்படுத்த கூடும் எனபதயே நமக்கு வெளிப்படுத்துகின்றன.



Source link