Last Updated:
அடிப்படை கட்டமைப்பு, சமூக நல திட்டங்கள், வரி சீர்திருத்தம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 3-ஆவது ஆட்சிப் பொறுப்பு ஏற்றதற்கு பின்னர் முதல் முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் வருமான வரி உச்ச வரம்பு குறித்த எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.
பொருளாதார வேகம், பலவீனமடைந்து வரும் நிலையில், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையும் காணப்படுகிறது. இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்.
உள்கட்டமைப்பு, விவசாயம், MSMEகள் மற்றும் பிற முக்கியமான துறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்த பட்ஜெட்டின்போது வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் பட்ஜெட் நடுத்தர வருமான பிரிவினருக்கு தாங்கள் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கும் விதமாக, வரி அடுக்குகளை திருத்துவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளார்.
இதேபோன்று மற்ற துறையினருக்கும் இந்த பட்ஜெட்டில் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் அமையுமா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் நெருங்கி வரும் நிலையில் Budget 2025 Date என்ற கேள்விக்கான விடைகூகுளில் அதிகம் தேடப்படுகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.
அடிப்படை கட்டமைப்பு, சமூக நல திட்டங்கள், வரி சீர்திருத்தம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
January 28, 2025 4:45 PM IST
Budget 2025 Date : மத்திய பட்ஜெட் 2025 எப்போது தாக்கல் செய்யப்படுகிறது? முக்கிய அம்சங்கள் என்னவாக இருக்கும்?