Last Updated:
Song | இந்த குறிப்பிட்ட பாடல் மழையில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் பாடல் சூப்பர்ஹிட் ஆனது மட்டும் இல்லாமல் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த குறிப்பிட்ட பாடல் மழையில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் பாடல் சூப்பர்ஹிட் ஆனது மட்டும் இல்லாமல் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இந்த பாடல் படமாக்கப்பட்டபோது நடிகைக்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்தது. அது எந்த படம்?, யார் அந்த நடிகை? என்று பார்க்கலாம்.
பொதுவாக, ஒரு திரைப்படத்தில் மழையும் பாடலும் சரியான கலவையாகும். மழையுடன் எடுக்கப்பட்ட பாடல் ஹிட் ஆவதுடன், மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெரும். பாலிவுட்டிலும் இதே நிலை தான். அக்ஷய் குமார் மற்றும் ரவீனா டாண்டன் முதல் அமீர் கான் மற்றும் கரீனா கபூர் கான் வரை அவர்கள் படத்தில் மழையில் நடனமாடுவதை பார்த்திருப்போம். மேலும், இந்த பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனது. இருப்பினும், மழையில் படமாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பாடல் உள்ளது. அது சூப்பர்ஹிட் ஆனது மற்றும் படத்தையும் மிகப்பெரிய வெற்றியடைய செய்தது.
இந்த பாடலை இன்னும் சுவாரஸ்யமாக்குவது, அதிகம் அறியப்படாத, திரைக்குப் பின்னால் இருக்கும் உண்மை தான். அது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அது என்னவென்றால், 1989இல் வெளியான ChaalBaaz திரைப்படத்தின் Na Jaane Kahan Se பாடல் தான். பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி மற்றும் சன்னி தியோல் நடித்துள்ள இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Also Read: மீண்டும் வந்த சிக்கல்..! பராசக்தி பட தலைப்புக்கு வந்த புதிய எதிர்ப்பு
மழையுடன் அழகிய நடனம் மற்றும் அற்புதமான மெல்லிசை, பாடலின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை ஆகியவை உங்களை ஆச்சரியப்படுத்தும். ஆனால், படப்பிடிப்பின் போது ஸ்ரீதேவிக்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்ததாக பாடலில் பணியாற்றிய நடன இயக்குனர் சரோஜ் கான் தெரிவித்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், தயக்கமின்றி படப்பிடிப்பை ஸ்ரீதேவி முடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பாடல் ஹிட் ஆனது மட்டுமின்றி படமும் மாபெரும் வெற்றி அடைந்தது.
பங்கஜ் பராஷர் இயக்கிய, சால்பாஸ் ஒரு ஸ்லாப்ஸ்டிக் காமெடி. இதில் ஸ்ரீதேவி இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்தார். அதாவது அவர் இரட்டையராக நடித்தார். இந்த படத்திற்கு லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் இருவரும் இசையமைத்துள்ளனர். பாடல் வரிகளை ஆனந்த் பக்ஷி எழுதியுள்ளார். வணிகரீதியாக வெற்றியடைந்த இந்தத் திரைப்படம், 1989ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாக ஆனது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.8 கோடி வசூலித்தது. இது 35வது ஃபிலிம்பேர் பரிந்துரைகளையும் பெற்றது. ஸ்ரீதேவியின் சிறந்த நடிப்பு மற்றும் சரோஜ் கானின் நடன அமைப்புக்கான அங்கீகாரம் உட்பட 12 விருதுகளை இந்த படம் வென்றது.
January 31, 2025 12:11 PM IST