[ad_1]
Last Updated:
கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடித்த ‘அக்கா’ இணையத் தொடரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 1980களில் வுமன் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இந்த தொடரை தர்மராஜா ஷெட்டி இயக்க, ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘அக்கா’ என்ற இணையத் தொடரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ், 1980களில் வுமன் கேங்ஸ்டர் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ‘பேபி ஜான்’ பாலிவுட் படம் வெளியானது. ஆனால், படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இணையத் தொடருக்கு ‘அக்கா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரை தர்மராஜா ஷெட்டி இயக்கியுள்ளார். ஒய்ஆர்எஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். தொடரில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ள இந்தத் தொடரின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டீசரில் அதிரடியான கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் காட்சியளிக்கிறார். மறுபுறம் ராதிகா ஆப்தே மிரட்டுகிறார். இரண்டு பெண்களுக்கு இடையிலான அதிகார மோதலை இந்தத் தொடர் பேசும் எனத் தெரிகிறது.
1980களில் கற்பனையான பெர்னூரு நகரத்தில் தாய்வழி சமூகத்தில் நடக்கும் கதையில், பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் நடக்கும் மோதல் தான் கதை என தகவல் வெளியாகியுள்ளது.
February 04, 2025 10:59 AM IST
[ad_2]
Source link