Last Updated:
பா.ரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 2025-ல் திரையிட தேர்வாகியுள்ளது. 19-ஆம் நூற்றாண்டு பூர்வகுடிகளின் கதையை மேஜிக்கல் ரியலிசம் மூலம் பேசியிருந்தது படம்.
பா.ரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் படத்துக்கு இசையமைத்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா படத்தை தயாரித்தார். படம் வெளியாகி ஒருபுறம் அதீத பாசிட்டிவ் விமர்சனங்களையும், மறுபுறம் நெகட்டிவ் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
இதையும் வாசிக்க: Monalisa | கும்பமேளா வைரல் பெண் மோனாலிசாவுக்கு அடித்த ஜாக்பாட்… விரைவில் மாறப்போகும் வாழ்க்கை!
19 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்த பூர்வகுடிகளின் கதையை மேஜிக்கல் ரியலிசம் திரைக்கதை மூலம் சொல்லியிருந்தார் பா.ரஞ்சித்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் மற்றொரு வெர்ஷன் அதாவது ‘டேரக்டர்ஸ் கட்’ நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாமில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளதாக பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
February 01, 2025 9:19 PM IST