[ad_1]
Last Updated:
விராட் கோலி 100 போட்டிகளில் விளையாடியதற்காக அவருக்கு பாராட்டு விழா டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது
ரஞ்சி கோப்பை தொடரின்போது விராட் கோலி ஒருவரின் காலை தொட்டு வணங்கினார். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில் அவர் யார் என்பது குறித்து கோலியின் ரசிகர்கள் தேடத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி தனது இழந்த ஃபார்மை மீட்டுக் கொண்டு வருவதற்காக உள்ளூர் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். இதற்காக தற்போது அவர் ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார்.
டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டெல்லி அணிக்காக முதல் இன்னிங்ஸில் விளையாடிய விராட் கோலி 15 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதற்கிடையே விராட் கோலி 100 போட்டிகளில் விளையாடியதற்காக அவருக்கு பாராட்டு விழா டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. விராட் கோலி இந்த சாதனையை 2022 மார்ச் மாதம் நிகழ்த்தினார். இருப்பினும் அவருக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு தேதி கிடைக்காத நிலையில், நேற்று அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரோஹன் ஜெட்லி விருதும் நினைவு பரிசும் வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கலந்து கொண்டு கோலியை வாழ்த்தினார்.
அப்போது தனக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்த ராஜ் குமார் சர்மாவின் காலை தொட்டு விராட் கோலி வணங்கினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
February 01, 2025 6:01 PM IST
[ad_2]
Source link