Last Updated:

உலகளவில் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி காணப்பட்டது. இதன் எதிரொலியாக இன்று ஆசியப் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.

News18News18
News18

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், கனடா மற்றும் சீன நாட்டுப் பொருட்களின் மீது இறக்குமதி வரி கடந்தவாரத்தில் விதித்தார். இதனால் உலகளவில் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி காணப்பட்டது. இதன் எதிரொலியாக இன்று ஆசியப் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.

வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 160 புள்ளிகள் வீழ்ச்சி காணப்பட்டது. அந்த வகையில் பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தன. மேலும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எல்அன்ட் டி, என்டிபிசி, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக 87 ரூபாயை கடந்துள்ளது. கடன்கள் மீதான வட்டியின் விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்று லாபம் ஈட்ட நினைத்ததும் பங்குச்சந்தைகள் சரிவுக்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் ரூ.5 லட்சம் கோடி இழப்பு.. இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு!



Source link