02
குறிப்பாக, அந்த தருணத்தில் காரை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற அஜித்குமார், உடனிருந்த நடிகர் ஆரவுக்கு எந்த ஒரு அடியும் படாமல் பார்த்துக் கொண்டார். நடிகர் ஆரவ் அந்த தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “இது நன்கு திட்டமிடப்பட்ட ஷாட்! ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்த 30 நிமிடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்து அந்த காட்சியை படமாக்கி முடித்தோம். பின்பு, அஜித் சார் என்னை தனியாக விடவில்லை. அவரே மருத்துவமனைக்கு என்னை அழைத்து சென்றார்.