கஷ்டத்தை சொல்லி மன்றாடிய தந்தை
‘‘அவரது தந்தை என்னிடம் வந்து, அவர் தனது வாழ்க்கையில் கொஞ்சம் கடினமான சூழ்நிலையை கடந்து வருவதாகவும், அவரது மகன் அடுத்த கட்டத்தில் விளையாடும் திறன் கொண்டவர் என்று உணர்வதாகவும் கூறினார். எனவே, அவரைப் பார்க்கும்படி என்னிடம் கேட்டார். நான் சில பந்துகளைப் பார்த்தேன், இந்தக் குழந்தைக்கு மிகப்பெரிய திறமை இருப்பதை உணர்ந்தேன். எனவே, அவரை 14 வயதுக்குட்பட்ட அகாடமியில் சேர்த்தோம். எனவே, அவர் 16 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோர் வரை அந்த முறையான செயல்முறை மூலம் வளர்க்கப்பட்டார். இறுதியாக, 21 வயதில், அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும், இந்தியாவுக்காக சதம் அடிப்பதையும் இப்போது நாங்கள் பார்க்கிறோம்,’’ என்று அவர் மேலும் கூறினார்.