கடந்த நிதியாண்டில் 7 லட்சமாக இருந்த வருமான வரி உச்சவரம்பு தற்போது 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்து ஆடிட்டர் ஜெயராஜன் கூறுகையில், “2025- 2026க்கான புதிய வருமான வரி திட்டத்தில் நடுத்தர மக்களைக் கருத்தில் வைத்து இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர்.

2020-21இல் பழைய வருமான வரி விதிப்பு மற்றும் புதிய வருமான வரி விதிப்பு என இரு வருமான விதிப்பாகப் பிரித்திருந்தனர். தற்போது பழைய வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வரி விதிப்பில் தான் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: Sea Erosion: கடல் அரிப்பால் மறையும் திருச்செந்தூர் கடற்கரை… மண் அரிப்பை தடுக்க தீர்வு என்ன…

அதாவது சென்ற வருடம், வருடத்திற்கு 3 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி 0% ஆகும். 3-7 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 5% ஆகும். 7-10 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 10% ஆகும். 10-12 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 15% ஆகும்.12-15 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 20% ஆகும்.

15 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு 30% வரியாகும். மேலும், கடந்த வருடம் ஒரு தள்ளுபடியும் கொடுத்தனர். அதாவது வருடத்திற்கு 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதில் வரி அடுக்கு மற்றும் தள்ளுபடி இரண்டு வகையாகப் பார்க்கப்படுகிறது. வரி அடுக்கில் ஏதேனும் மாற்றங்கள் செய்து விட்டால் அது நிரந்தர மாற்றமாக இருக்கும். அதே சமயத்தில் தள்ளுபடி ஆக சில விதிப்புகளைச் செய்தால் அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: Dirt Bike Racing: அந்த பையனுக்கு பயம் இல்ல.. ஆஃப் ரோடு ரேஸில் புழுதி பறக்க கெத்து காட்டும் 8 வயது சிறுவன்..

அதன்படி தற்போது 2025-26 வரி அடுக்கில் வருடத்திற்கு 4 லட்சம் வரை வருமானம் உள்ள நபர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி விகிதம். வருமானம் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்தால் 10% வரி விகிதமும், ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை இருந்தால் 15% வரி விகிதம்.

ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருந்தால் 20% வரி விகிதமும் பொருந்தும். ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரூ.24 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்கள் 25% வரி விகிதத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 30% என்ற அதிகபட்ச வரி விகிதம் ஆகும்.

இதில் இரண்டாவதாக என்ன கொண்டுவந்துள்ளார்கள் என்றால் நிகர வரி தள்ளுபடியில் 25000 என்பதை 60,000 ஆக கொண்டு வந்துள்ளனர். 7 லட்சம் இருந்ததை 12 லட்சமாக உயர்த்தியுள்ளனர். இதில் 12 லட்சத்திற்கு மேல் வருமானம் இருக்கும் பட்சத்தில் நிகர வரி 60,000 மற்றும் 15 சதவீத வரியும் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: Rekla Race: ஒரு வண்டி ரெடி பண்ணவே ரூ.2.5 லட்சம்… ஜல்லிக்கட்டுக்கு சற்றும் குறைவில்லாத ரேக்ளா ரேஸ்…

ஒருபுறம் நிகர வரி தள்ளுபடியில் 12 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில் இதில் பல சலுகைகளை இழந்துள்ளோம். அதாவது மாத ஊதியம் வாங்குபவர்கள் பயணப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு, சிறப்புக் கொடுப்பனவு ஆகியவற்றை இழக்க நேரிடும்.

மேலும், சொந்தமாக வீடு கட்டி குடியிருப்பவர்கள் வீட்டுக் கடன் வாங்கி இருந்தால் 2 லட்சம் வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தற்போது அந்தச் சலுகையும் இழக்கப்படுகிறது. தன் சொந்தக் குடியிருப்புக்கு இல்லாமல் வாடகை விடுவதற்கு வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு மட்டுமே 2 லட்சம் வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் போன்ற பலரும் பல சலுகைகளை இழக்க நேரிடும்.

இந்த நிகர வரி தள்ளுபடி அதிகமாகக் கொடுப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றது. ஒன்று பொருளாதார ரீதியாகப் பார்க்கப்படுகிறது. அதாவது விலைவாசி உயர்ந்த காரணத்தினால் மக்கள் பணப்புழக்கம் அரசாங்கம் கைகளில் சென்று விட்டது. அதனைத் தவிர்த்துச் செலவழிக்கும் சக்தியைக் கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் கோடி மதிப்பில் மக்கள் கையில் செலவழிக்கும் திறன் இருக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: Natural Compost: விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு உரம்… இறைச்சிக் கழிவை இயற்கை உரமாக்கும் குன்னூர் நகராட்சி…

மேலும், பெரும்பாலான நபர்கள் இன்னமும் பழைய வரி விதிப்பில் தான் இருக்கின்றனர். அவர்களைப் புதிய வரி விதிப்பு மாற்றுவதற்காக இந்த மாதிரியான தள்ளுபடிகளை அரசாங்கம் கொண்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link