Last Updated:
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு குறித்து பார்ப்போம்.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு குறித்து பார்ப்போம்.
கடைசியாக அஜித் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியானது ‘துணிவு’. அதன் பிறகு 2 ஆண்டுகளாக அஜித்தின் படம் வெளியாகவில்லை. பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட ‘விடாமுயற்சி’ பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் புதிய படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதையொட்டி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையை பொறுத்தவரை முக்கியமான திரையரங்குகளில் முதல் நாளுக்கான பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகி விட்டன. பிவிஆர் தரப்பில் இன்னும் டிக்கெட் விற்பனை தொடங்கவில்லை.
படத்தின் சிறப்புக் காட்சிக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில், 9 மணி காட்சிக்கான புக்கிங் இன்னும் தொடங்கவில்லை. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் முன்பதிவு மூலம் மட்டும் இப்படம் ரூ.2.69 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் வெளிநாடுகளில் இப்படம் ப்ரீ புக்கிங் மூலம் ரூ.3.5 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் படம் ப்ரீ புக்கிங்கில் ரூ.20 கோடி வசூலை நெருங்கும் என கூறப்படுகிறது.
February 02, 2025 7:10 PM IST