Last Updated:

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

News18News18
News18

மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 10.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

சஞ்சு சாம்சன் 16 ரன்களில் வெளியேற அடுத்து வந்த திலக் வர்மாவுடன் இணைந்து அபிஷேக் சர்மா சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் சேர்த்தது. திலக் வர்மா 24 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். சிவம் துபே 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 13 சிக்சர் 7 பவுண்டரியுடன் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா வெளியேறினார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 247 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 10.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதையும் படிங்க – நிகி பிரசாத் முதல் விராட் கோலி வரை.. ஜூனியர் உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன்கள்

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, சிவம் துபே, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



Source link