2024ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் தோராயமாக ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்த வருடமும் உங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் இதுவரை செய்யாவிட்டாலும், இன்னும் அதற்கான நேரம் உள்ளது. எனவே உங்களுடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதற்கு உதவும் சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

வரி சேமிப்புத் திட்டம் அல்லது ஓய்வு காலத்திற்கான திட்டம் மற்றும் உங்களுடைய பொருளாதார இலக்குகளை அடைவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய சில நல்ல திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

விளம்பரம்

வரி சேமிப்பு

பெரும்பாலான இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான முடிவுகளை எடுப்பதில் வரி முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக அளவு பணத்தை வரியாக செலுத்துவதற்கு நமக்கு சற்று வருத்தமாகத் தான் இருக்கும். எனினும் இதற்காகவே ஒரு சில முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. மேலும் ஓய்வு கால சமயத்தில் உங்களுக்கு தொடர்ச்சியான வருமானத்தை பெற்றுத் தரும் சில திட்டங்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

டேர்ம் இன்சூரன்ஸ்

டேர்ம் இன்சூரன்ஸ் என்பது அனைத்து விதமான பொருளாதார திட்டத்திற்கான அடித்தளமாக அமைகிறது. இது பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாக உள்ளது. இது முதலீட்டின் மிகவும் எளிமையான ஒரு வடிவமாக கருதப்படுகிறது. கணிசமான அளவு பிரீமியம் தொகையை செலுத்தி உங்களுடைய டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த மாதிரியான திட்டங்கள் உங்களுக்கு வருமான வரிச் சட்டத்தில் உள்ள 80C-ன் கீழ் 1,50,000 ரூபாய் வரையிலான வரி பலன்களை பெற்றுத் தரும்.நீங்கள் என்ன மாதிரியான ஆயுள் காப்பீட்டைப் பெற்றாலும் சரி, டேர்ம் இன்சூரன்ஸ் பெறுவதற்கு மறக்க வேண்டாம்.

விளம்பரம்

உறுதியளிக்கப்பட்ட ரிட்டன் திட்டங்கள்

அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் ஏற்றதாக இருக்கும். மார்க்கெட்டில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிலையான வட்டியில் பாதுகாப்பான முறையில் உங்களுடைய பணம் வட்டியோடு திரும்பக் கிடைக்கும். இந்த உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்கள் ஆயுள் காப்பீட்டுடன் வருகின்றன. எனவே, பாலிசிதாரர் பாலிசி காலத்தில் இறந்துவிட்டால் கூட அவருடைய குடும்பத்திற்கு இந்த பணம் வழங்கப்படும். மேலும், இந்த திட்டத்தில் உங்களுக்கு விருப்பமான கால அளவுகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது 30 வருடங்கள் வரை உங்களுக்கு கிடைக்கக்கூடிய ரிட்டனுக்கான விகிதத்தை லாக் செய்தும் கொள்ளலாம். அது மட்டுமின்றி, நீங்கள் பிரிவு 80C-ன் கீழ் வரி பலன்களையும் கிளைம் செய்யலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் இந்திய ஐஸ்கிரீம் பிராண்ட் எது தெரியுமா?

ULIP

ஒருவேளை நீங்கள் “நான் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமானாலும் தயார்” என்று சொல்பவர் என்றால் உங்களுக்கு ULIP அல்லது யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான் ஏற்றதாக இருக்கும். இது இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு ஆகிய இரட்டிப்புப் பலனை தருகிறது. இந்த திட்டங்களிலும் வரி பலன்கள் உள்ளன. எனினும் இதிலிருந்து நீங்கள் பெரும் ரிட்டன்கள் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல ULIP பென்ஷன் திட்டங்கள் “பென்ஷன் பூஸ்டர்” அம்சத்துடன் வருகின்றன. இதில் நிர்வகிப்பு கட்டணங்கள் திருப்பிக் கொடுக்கப்படுகின்றன. இது உங்களுடைய ரிட்டன்களை அதிகரிக்கிறது. மேலும் 5 வருடங்கள் கழித்து அவசர கால சூழ்நிலையின் பெயரில் உங்களுடைய பாதி அளவு பணத்தை நீங்கள் வித்ரா செய்து கொள்ளலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
பயன்படுத்திய மற்றும் புதிய கார்களுக்கான கடன்கள்: உங்களுக்கான சிறந்த ஆப்ஷன் எது?

ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுடைய இறப்புக்கு பிறகு உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் உதவும். அதுமட்டுமின்றி ஒரு விரிவான ஆயுள் காப்பீடு பெறுவது அவசரகால மருத்துவ செலவுகளை சமாளிப்பதற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்யும். கூடுதலாக நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு பிரிவு 80D-ன் கீழ் வரி பலன்களை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் உங்களுடைய சீனியர் சிட்டிசன் பெற்றோர்களுக்காக ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கும் 75,000 ரூபாய் வரையிலான டிடக்‌ஷனை கோரலாம். எனவே இந்த வருடமாவது உங்களுடைய முதலீட்டு கனவை நனவாக்குங்கள்.

விளம்பரம்

.



Source link