டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான Paytm ஒரு புதிய UPI அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய அம்சம் யூசர்களை தங்களுக்கு விருப்பமான தேதிகளுக்கு இடைப்பட்ட ட்ரான்ஸ்ஷாக்ஷன் வரலாறு சம்பந்தமான விரிவான ஸ்டேட்மெண்ட் எடுப்பதற்கு உதவுகிறது. இந்த சேவை அனைத்து யூசர்களுக்கும் எந்த ஒரு கூடுதல் செலவு இல்லாமல் கிடைக்கிறது.
இதன் மூலம் அனைவரும் தங்களுடைய செலவுகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவும், அதே நேரத்தில் இன்கம் டேக்ஸ் தாக்கல் செய்யும்போது உதவும் நோக்கத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா Paytm-ஐ புதிய UPI யூஸர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
UPI ஸ்டேட்மெண்ட் டவுன்லோட் அம்சத்தை அறிமுகப்படுத்திய Paytm
ஒரு பிரஸ் ரிலீஸின்போது இந்த புதிய UPI ஸ்டேட்மென்ட் டவுன்லோட் அம்சத்தை Paytm நிறுவனம் வெளியிட்டது. இந்த அம்சத்தை பயன்படுத்தி யூஸர்கள் மிக எளிதாக அவர்களுடைய ட்ரான்ஸாக்ஷன் வரலாற்றுக்கான ஒரு விரிவான டாக்குமென்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த விவரங்களை எந்த குறிப்பிட்ட தேதிகளுக்கு வேண்டுமானாலும் உங்களால் டவுன்லோட் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் ஒரு மொத்த நிதியாண்டிற்கும் இதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் டவுன்லோட் செய்யும் ஸ்டேட்மெண்ட் என்பது PDF ஃபார்மேட்டில் இருக்கும். மேலும் கூடிய விரைவில் இதனை Excel ஃபைல் ஃபார்மேட்டில் டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை சேர்க்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Paytm அறிமுகப்படுத்தியுள்ள இந்த UPI ஸ்டேட்மெண்ட் டவுன்லோட் அம்சத்தில் ட்ரான்ஸ்ஷாக்ஷன் தொகைகள், பணம் பெற்றவரின் விவரங்கள், பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவருடைய செலவுகளை கண்காணிக்கும் அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கான பொருளாதார சம்பந்தப்பட்ட தகவல்களை பராமரிப்பதற்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும் என்று Paytm நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தொழில்சார்ந்த செலவுகளை UPI மூலமாக செய்யும் நபர்கள் அல்லது வரிகளை செலுத்துவதற்கு சார்ட்டட் அக்கவுண்டன்ட்களை பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் நிச்சயமாக உதவும்.
இதையும் படிக்க:
120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய LTPO டிஸ்ப்ளேக்களுடன் அறிமுகமாக உள்ள ஐபோன் 17 சீரிஸ்…!!
UPI ஸ்டேட்மெண்ட் டவுன்லோட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
-
இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு யூசர்கள் முதலில் Paytm அப்ளிகேஷனை திறக்க வேண்டும்.
-
அப்ளிகேஷனின் ஹோம் ஸ்கிரீனில் காணப்படும் “பேலன்ஸ் & ஹிஸ்டரி” ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
-
இந்த இடத்தில் உள்ள டவுன்லோட் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
-
இதில் ஒருவர் ஒரு மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள், ஒரு வருடம் மற்றும் குறிப்பிட்ட இந்த தேதியில் இருந்து இந்த தேதி வரையிலான வரம்புகளை தேர்வு செய்வதற்கான ஆப்ஷனைப் பெறுவார்கள்.
-
அதனை தேர்வு செய்த பிறகு உங்களுடைய ஸ்டேட்மென்ட் டவுன்லோட் செய்யப்படும்.
.