தீபாவளி (31-10-2024) அன்று தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயரவியின் ‘பிரதர்’, கவின்-ன் ‘பிளடி பேக்கர்’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ என 4 படங்கள் திரைக்கு வந்தன. ஒரே நாளில் வெளியான இந்த 4 படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது, வெளியான படங்களில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘ரங்கூன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர்.

விளம்பரம்

ரிலீசுக்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் காஷ்மீரில் தீவிரவாதிகளை வீழ்த்தி வீரமரணமடைந்து, உயரிய விருதான அசோக சக்ராவைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் கதை என்பதுதான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி அன்று திரையரங்குகளில் அமரன் வெளியானது. படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை பெற்று, பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘அமரன்’ படக் குழுவினருக்கு முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் பாராட்டு தெரிவித்தனர்.

விளம்பரம்

News18

‘அமரன்’ படம் வெளியான 2 நாட்களில் ரூ. 40 கோடி வசூல் ஈட்டியது, தற்போது பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ. 200 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திரையரங்கில் சக்கைபோடு போட்டுவரும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் அமரன் படத்தின் உரிமத்தை முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் சுமார் 60 கோடி ரூபாய்க்கு பெற்றதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: 
Jason Sanjay Movie Hero | விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ இவர்தான்.. உறுதி செய்த பிரபல நடிகர்!

விளம்பரம்

ஆனால் படம் எந்த தேதியில் வெளியாகப்போகிறது என்ற தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், அமரன் படம் Netflix ஓடிடி தளத்தில் நவம்பர் 29-ம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.



Source link