பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ட்ரையம்ப் (Triumph), தனது Tiger 1200-ன் 2025-ஆம் ஆண்டு மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் ரூ.19.39 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு ஜிடி மற்றும் ரேலி என 2 வேரியன்ட்ஸ்களில் வழங்கப்படுகிறது. அதேநேரம், மேலே குறிப்பிடப்பட்ட வேரியன்ட்ஸ்கள் GT Pro, GT Explorer, Rally Pro மற்றும் Rally Explorer என அட்வான்ஸ்ட் கேட்டகிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

2025 வெர்ஷன் சிறந்ததா?

தற்போதைய வெர்ஷனோடு ஒப்பிடுகையில், சமீபத்திய வெர்ஷன் மிகவும் மேம்பட்டதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிலப்பரப்புகளில் சிறந்த ரைடிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வெர்ஷன் ஒரு ஆக்ரஸிவ் ஸ்டைல் ​​ஸ்டேட்மென்ட்டை கொண்டுள்ளது. ஸ்லீக் LED இன்டிகேட்டர்ஸ்களுடன் இணைக்கப்பட்ட முழுமையான LED அடாப்டிவ் ஹெட்லைட் செட்டப் உள்ளது.

Also Read:
Snapdragon 8 Elite ப்ராசஸருடன் அறிமுகமாகியுள்ள OnePlus 13 மொபைல்.. இவ்வளவு அம்சங்களா? முழு விவரம் இதோ!

விளம்பரம்

அப்டேட் செய்யப்பட்ட Triumph Tiger 1200!

பின்னால் அமர்ந்து செல்வோரின் வசதிக்காக கிராப் ஹேண்டில்ஸ் உடன் கூடிய ஸ்ப்ளிட் சீட்டிங் அரேஞ்ச்மென்ட்டை நிறுவனம் இந்த அப்டேட்டட் வெர்ஷனில் சேர்த்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, ப்ளூடூத்-எனேபிள்ட் 7-இன்ச் TFT ஸ்கிரீன் உள்ளது. இது தவிர, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிட்டிருக்கும் Tiger 1200 வெர்ஷன் கீலெஸ் இக்னிஷன் அம்சத்தை கொண்டுள்ளது. தவிர பிளைண்ட் ஸ்பாட் ரேடார் சிஸ்டம், ஹில் ஹோல்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. தவிர My Triumph அப்ளிகேஷனை பயன்படுத்தி இந்த வாகனத்தை கட்டுப்படுத்தலாம் அல்லது கண்காணிக்கலாம்.

விளம்பரம்

எஞ்சின் மற்றும் பவர்

Tiger 1200 மோட்டார் சைக்கிளானது மேம்படுத்தப்பட்ட 1160சிசி டிரிபிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 148 bhp பவர் மற்றும் 9,000 rpm மற்றும் 7,000rpm-ல் 130 Nm பீக் டார்க்கை (peak torque) உருவாக்குகிறது. இந்த எஞ்சின் ஸ்லிப்-அன்ட் அசிஸ்ட் க்ளிப்ட்ச் கியர்பாக்ஸுடன் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. டைகர் 1200 ஜிடி ரேஞ்ச் 19 இன்ச் ஃப்ரன்ட் மற்றும் 18 இன்ச் ரியர் அலாய் வீல்ஸ் களைப் பெறுகிறது. ஜிடி ப்ரோ வேரியன்ட் 20 லிட்டர் ஃப்யூயல் டேங்கையும், ஜிடி எக்ஸ்ப்ளோரர் 30 லிட்டர் ஃப்யூயல் டேங்கையும் பெறுகிறது.

விளம்பரம்

.



Source link