ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை என்றால், பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துவார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ​​“பும்ரா துணை கேப்டன். எனவே ரோஹித் இல்லையென்றால் அவர்தான் கேப்டனாக நியமிக்கப்படுவார்” என தெரிவித்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ரோகித் சர்மாவுக்கு 6ஆவது இடம்… ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி விகிதம் உள்ள கேப்டன்கள் யார் யார் தெரியுமா?

இதற்காக இந்திய அணி இன்று மும்பையிலிருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரோகித் சர்மாவை பற்றியும், கே.எல்.ராகுல் பற்றியும் விளக்கமளித்தார்.

அப்போது ரோகித் சர்மா இல்லாத பட்சத்தில் அணியை யார் வழிநடத்துவார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தற்போது பும்ரா தான் துணை கேப்டனாக உள்ளார். ரோகித் சர்மா இல்லையென்றால் அவர் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார். தற்போதுவரை ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து முடிவாகவில்லை. அவர் விளையாடுவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்” என தெரிவித்தார்.

விளம்பரம்

இன்று ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடும் சூழலில் அவர் விரைவில் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக வைட்டமின் டி குறைபாடு இருந்தால் உடலில் ஏற்படும் அபாயங்கள்.!


நீண்ட காலமாக வைட்டமின் டி குறைபாடு இருந்தால் உடலில் ஏற்படும் அபாயங்கள்.!

தொடர்ந்து பேசிய கம்பீர், “ரோகித் சர்மா இல்லையென்றால் அணியில் கே.எல்.ராகுல், அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். அது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

ஜஸ்பிரீத் பும்ரா ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டன்சி செய்துள்ளார். ஆனால் அப்போது இந்திய அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.



Source link