துல்கர் சல்மான் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை அள்ளி குவித்து இருக்கிறது. இந்த தீபாவளியையொட்டி அமரன், லக்கி பாஸ்கர், பிரதர் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்தன. இவற்றில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தெலுங்கில் வெளியாகி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படத்தை தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.
உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வங்கி பணியாளராக துல்கர் சல்மான் இந்த படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார்.
1992ல் நடக்கும் கதையாக இந்த படம் படமாக்கப்பட்டு இருந்தது. அன்றைய சூழலில் நடந்த நிதி மோசடியை மையமாக வைத்து இயக்குனர் வெங்கி அட்லூரி விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருந்தார்.
ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படத்துடைய பின்னணி இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் டிஜிட்டல் உரிமையை வாங்கி இருந்த நிலையில், இந்த படம் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஓ.டி.டி. ரிலீஸ் களில் ஒன்றாக லக்கி பாஸ்கர் திரைப்படம் மாறியுள்ளது.
.