Last Updated:
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘வேட்டையன்’ படத்தை முடித்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சவுபின் சாஹிர், நாகர்ஜுனா, உப்பேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு தாய்லாந்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
இதையும் வாசிக்க: Pushpa 2 | அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தை எந்த ஓடிடியில், எப்போது பார்க்கலாம்?
விமான நிலையத்தில் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது அவரிடம், “நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வாழ்த்துகள்” என தெரிவித்து அங்கிருந்து கிளம்பினார் ரஜினி. ‘கூலி’ படத்தை முடித்துவிட்டு அடுத்து நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
January 28, 2025 8:13 AM IST