Last Updated:

துபாயில் உணவகத்தில் ரசிகர் பாடிய பாடலை ரசித்த நடிகர் அஜித், அவரை ஆரத்தழுவி வாழ்த்தினார். அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்கள் விரைவில் வெளியாகின்றன.

News18

துபாயில் உள்ள உணவகம் ஒன்றில் அஜித் என்பவர் பாடிய பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்தார் நடிகர் அஜித்குமார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி மாதமும், ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் மாதமும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே கார் ரேஸில் பிசியாக இருக்கும் நடிகர் அஜித், அக்டோபர் மாதம் தான் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறார்.

அதுவரை படம் எதிலும் கமிட்டாக போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், துபாயில் உள்ள ரெஸ்டாரண்டில் நடிகர் அஜித் குமாரை பார்த்த அவரது ரசிகர் ஒருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலை பாடி அசத்தினார்.

அதன்பின் ரசிகரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். ரசிகர் தனது பெயர் அஜித் என்று கூறியதைக் கேட்டு நடிகர் அஜித் வியந்தார். இந்நிலையில், அஜித் நடித்துள்ள விடா முயற்சி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மூதாட்டிகள் துள்ளலாக நடனமாடிய வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.





Source link