இந்த நிதிநிலை அறிக்கையில், மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வருமான வரி உச்சவரம்பில், ரூ.12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி கட்டத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் (நிலைகழிவு கழிக்கப்பட்ட பின்)
ரூ. 0 – 4 லட்சம் வரை வரி இல்லை என்றும்
ரூ. 4 – 8 லட்சம் வரை 5% வரியும்,
ரூ.8 – 12 லட்சம் வரை 10% வரியும்,
ரூ.12 – 16 லட்சம் வரை 15% வரியும்,
ரூ.16 – 20 லட்சம் வரை 20% வரியும்,
ரூ. 20 – 24 லட்சம் வரை 25% வரியும்,
ரூ. 24 லட்சத்திற்கு மேல் 30% வரியும் அரசுக்கு கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய வருமான வரி குறித்து எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகவில்லை.
உங்கள் வரி எப்படி கணக்கிடப்படுகிறது?
உதாரணத்திற்கு நீங்கள் மாதம் ரூ.12 லட்சம் வருமானம் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் நீங்கள் அரசு கொடுக்கும் வருமான வரி உச்சவரம்பிற்குள் வருகிறீர்கள். ஆகையால் நீங்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. அதுவே ரூ.12,50,000-க்கு மேல் நீங்கள் வருமானம் பெற்றால் (நிலை கழிவு நீங்கலாக) நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் ரூ.15 லட்சம் வருமானம் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த வருமானம் அரசின் வருமான வரி செலுத்துபவர்களின் கீழ் வருகிறது.
இதையும் படிக்க: புதிய வருமான வரி மசோதா: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு – முழு விவரம் இதோ
இந்த தொகையில், அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, நீங்கள் முதல் 4 லட்ச ரூபாய்க்கு வரி கட்டத் தேவையில்லை. அடுத்த 4 முதல் 8 லட்ச ரூபாய்க்கு 5% வரியை கட்ட வேண்டும். அடுத்த 8 முதல் 12 லட்ச ரூபாய்க்கு 10% மற்றும் ரூ. 12 முதல் 15 லட்சத்திற்கு 15% வரியும் கட்ட வேண்டும்.
அப்படி என்றால், முதல் அடுக்கில் உங்களுக்கு வரி இல்லாமலும், அடுத்த அடுக்கில் உங்களுக்கு ரூ.20,000, அடுத்த அடுக்கில் ரூ.40,000 மற்றும் கடைசி அடுக்கில் ரூ. 45,000 என மொத்தம் ரூ.1,05,000 நீங்கள் வரியாக செலுத்த வேண்டும்.
February 01, 2025 1:25 PM IST
Income Tax Slabs Explained | வருமான வரியில் சந்தேகமா? நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? எளிய விளக்கம் இதோ..!