Last Updated:
சேப்பாக்கத்தில் 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நிதிஷ் குமார், ரிங்கு சிங் மாற்றமாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜோரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கடந்த 22 ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இராண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி உள்ளது. 5 வருடங்களுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச டி20 போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். மேலும் இன்றைய போட்டியில் இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல் டி20 போட்டியில் விளையாடிய நிதிஷ் குமார், ரிங்கு சிங் அணியில் இல்லை. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜேரல் அணியில் இடம் பெற்றுள்ளனர். சேப்பாக்கம் டி20 போட்டியிலும் முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை. பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த அவர் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது.
இந்திய அணி : சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், த்ருவ் ஜுரேல், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்தி.
Chennai,Tamil Nadu
January 25, 2025 6:45 PM IST