Last Updated:
விஷால் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் தெலுங்கில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் தெலுங்கில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு திரைக்கு வர இருந்த படம் ‘மகாராஜா’. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், சோனு சூட், மணிவண்ணன், மனோபாலா, சடகோபன் ரமேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
விஜய் ஆண்டனி படத்துக்கு இசையமைத்திருந்தார். தயாரிப்பு நிறுவனத்துக்கு இருந்த சிக்கலால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சந்தானத்தின் நகைச்சுவையும், இரண்டாம் பாதியில் மனோபாலாவின் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தன. இதனால் படம் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து படத்தை தெலுங்கில் வெளியிட திட்டமிட்டு, கடந்த 31-ம் தேதி தெலுங்கு பேசும் மாநிலங்களில் படம் வெளியானது.
ஆனால் படம் பெரிய அளவில் அங்கு வரவேற்பை பெறவில்லை. அதன்படி, முதல் நாளில் இப்படம் ரூ.40 லட்சம் வசூல் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளில் ரூ.30 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. மொத்தமாக படம் ரூ.1 கோடி வசூலைக் கூட நெருங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
February 05, 2025 12:47 PM IST