Last Updated:
அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ பிப்ரவரி 14-ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகும். அறிமுக இயக்குநர் பாலாஜி கேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
அசோக் செல்வன் நடித்துள்ள ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இந்தப் படத்தில் அவந்திகா நாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை திருமலை தயாரித்துள்ளார். படம் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையும் வாசிக்க: Ajith | பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள் – ரஜினிகாந்த்
கலவையான விமர்சனங்களைப் பெற்றது. காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. இந்நிலையில் படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து அசோக் செல்வன் நடிப்பில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
January 28, 2025 9:12 AM IST