தனிநபர் கடன்களை பொதுவாக வங்கிகள், வங்கி அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு ஏஜென்சிகள், மொபைல் ஆப்கள் மூலம் உடனுக்குடன் பெற முடிகிறது. எதிர்பாராத அல்லது பெரிய செலவுகளை சமாளிக்கும் வகையில், உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தனிநபர் கடன்கள் ஒருவருக்கு உதவக்கூடும். விடுமுறை நாட்கள், மருத்துவ சிகிச்சை அல்லது வீடு புதுப்பித்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தனிநபர் கடனை பயன்படுத்தலாம்.
கடந்த சில ஆண்டுகளில் இந்த வகையான கடன்களை எளிதாக பெற முடிவதுடன், எளிதாக திருப்பிச் செலுத்தும் அம்சங்களுடனும் வருவதால் இவை பிரபலமடைந்துள்ளன. தனிநபர் கடன்களை சமமான மாதாந்திர தவணைகளில் (EMI) திருப்பிச் செலுத்தலாம் என்பதால், இது கடன் வாங்குபவர்களுக்கு நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது.
அதிலும், குறிப்பாக டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் தளங்கள் தனிநபர் கடன்களைப் பெறுவதை மிகவும் எளிமையாக்கி உள்ளன. பொதுவாக, ஒருவரின் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றை வைத்து கடன் வழங்கப்படும். ஆனால், டிஜிட்டல் முறையில், சில குறிப்பிட்ட படிகளை நிவர்த்தி செய்வதன் மூலம் தனிநபர் கடன் வழங்குவதை எளிதாக்கி உள்ளது. அதிலும், பல கடன் வழங்குநர்கள், மாதாந்திர சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.
ஒருவர் ரூ.18,000 சம்பளத்துடன் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், 100% டிஜிட்டல் முறையில், ரூ.15 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த தனிநபர் கடன்கள் ஆண்டுக்கு 12%இல் தொடங்கும் வட்டி விகிதத்துடன் வருகின்றன.
இந்தியாவில் தனிநபர் கடனை யார் யார் பெறலாம்?
இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், பொதுவாக 21 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு தனிநபர் கடன்களை வழங்குகின்றன. கடன் வழங்குநர்கள், கடன் பெறுபவரின் கடன் வரலாறு மற்றும் வேலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிட்டு கடன் வழங்குகிறார்கள். அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் கடன் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
சில வங்கிகள் கடன் விண்ணப்பத்தைத் தொடர்வதற்கு முன்பாகவே, குறைந்தபட்ச வருவாய் அல்லது சம்பளத்தை கேட்கின்றன. பல வங்கிகள் மற்றும் வங்கி அல்லா நிதி நிறுவனங்கள் ரூ.15,000 வரையிலான குறைந்த மாத சம்பளம் பெறுபவர்களுக்கு கடன்களை வழங்குகின்றன.
இதையும் படிக்க: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… மலிவு விலையில் மற்றொரு ரீசார்ஜ் பிளான் அறிமுகம்..!
ரூ.18,000 சம்பளத்துடன் தனிநபர் கடனைப் பெற முடியுமா?
இந்தியாவில் உள்ள சில கடன் வழங்குநர்கள் தனிநபர் கடனைப் பெறுவதற்கான தகுதியாக குறைந்தபபட்ச சம்பள வரம்பை நிர்ணயித்துள்ளன. இது பொதுவாக மாதத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும். எனவே, ரூ.18,000 சம்பளத்துடன் தனிநபர் கடனைப் பெறுவது எளிதானது அல்ல. ஆனால் அது சாத்தியமற்றதும் அல்ல. கடன் பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள், பொதுவாக கடன் வழங்குபவரை பொறுத்து மாறுபடும்.
எனவே, எந்தவொரு கடனைப் பெறுவதற்கு முன்பும், கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள், வட்டிக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை முழுமையாக சரிபார்ப்பது முக்கியம்.
தனிநபர் கடனுக்கான தகுதி
ரூ.18,000 சம்பளத்துடன் தனிநபர் கடனைப் பெறுவதற்கு கடன் வழங்குபவர்கள் கேட்கும் பொதுவான விஷயங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.
- இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- வயது 21 முதல் 60 வரை இருக்க வேண்டும்.
- ஏதேனும் அரசு நிறுவனம், தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் பணியில் இருக்க வேண்டும்.
- பே ஸ்லிப் மற்றும் வருமானச் சான்று ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.
- கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்க வேண்டும், பொதுவாக 700-க்கு மேல் இருக்க வேண்டும்.
இதையும் படிக்க: 14 வயதில் கூலித் தொழிலாளி; இன்று ரூ.16,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர்… யார் அவர்?
தனிநபர் கடனுக்குத் தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது கேஒய்சி (KYC)-க்கான வாக்காளர் அட்டை போன்ற அடையாளச் சான்று.
- உங்கள் ஆதார் அட்டை, யூடிலிட்டி பில்கள் போன்ற முகவரிச் சான்று.
- வருமானச் சான்றாக பே ஸ்லிப்கள் மற்றும் பேங்க் ஸ்டேட்மென்ட்கள்.
திருப்பிச் செலுத்தும் காலம் நீண்டிருக்கும் பட்சத்தில், உங்களது மாதாந்திர கட்டணம் குறைவாக இருக்கும். ஆனால், ஒட்டுமொத்தமாக அதிக வட்டியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில், குறுகிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் வட்டி பெரிய அளவில் குறைவதை பார்க்க முடியும்.
எனவே, எந்தவொரு கடனைப் பெறுவதற்கு முன்பும், கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள், வட்டிக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை முழுமையாக சரிபார்ப்பது முக்கியம்.
February 04, 2025 6:44 PM IST