Last Updated:

Philadelphia plane crash | அமெரிக்காவின் பிலடெல்பியாவில் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18News18
News18

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உயிர் காக்கும் சிகிச்சைக்காக பறந்து சென்ற விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள வடக்குபிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து குழந்தை ஒன்றின் சிகிச்சைக்காக மெக்சிகோவின் டிஜுவானா நகர் நோக்கி ஜெட் விமானம் புறப்பட்டது.

விமானத்தில் மெக்சிகோவைச் சேர்ந்த குழந்தை, குழந்தையின் தாயார், விமானிகள் இருவர், ஒரு மருத்துவர் மற்றும் ஓர் உதவியாளர் என 6 பேர் பயணித்தனர்.

ஆயிரத்து 500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், நகர்ப்பகுதியில் விழுந்து சிதறியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேருடன், விமானம் விழுந்த இடத்தில் காருக்குள் இருந்த ஒருவரும் உயிரிழந்தார். மேலும், அந்த இடத்தில் இருந்த 19 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, விர்ஜினியாவிலுள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்துக்கு அருகே ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த சிலநாட்களிலேயே மேலும் ஒரு விமான விபத்து ஏற்பட்டது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Source link