Last Updated:

ராகுல் டிராவிட் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராகுல் டிராவிட்ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்டின் கார் விபத்தில் சிக்கியதால், அவர் ஆட்டோ ஓட்டுநரிடம் சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நேற்று மாலை பெங்களூருவில் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கினார்.

அவரது கார் மீது ஆட்டோ ஒன்று உரசியதால், அவரின் காரில் கீறல்கள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராகுல் டிராவிட், அந்த ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பெங்களூருவின் கன்னிங்ஹாம் சாலையில் மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்தது என்றும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில், கார் மோதிய பிறகு டிராவிட் தனது காரை பரிசோதிப்பதையும், ஆட்டோ ஓட்டுநருடன் சிறிய வாக்குவாதம் நடத்துவதையும் பார்க்க முடிகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link