Last Updated:

நடிகை ராஷ்மிகா மந்தனாவை வீல் சேரில் அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18

நடிகை ராஷ்மிகா மந்தனாவை வீல் சேரில் அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘புஷ்பா 2’ படத்தை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் படம் ‘Chhaava’. பாலிவுட் படமான இந்தப் படத்தில் விக்கி கவுஷல் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘மீமி’ படத்தை இயக்கிய லக்ஷ்மண் உத்தேகர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.

இதில் நடிகர் விக்கி கவுஷல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாகவும், ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாயாகவும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 14-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு மும்பை விமான நிலையம் வந்த நடிகை ராஷ்மிகா வீல் சேரில் வந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது ராஷ்மிகாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் ஷூட்டிங்க்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் ராஷ்மிகா. ஆனால், காயத்தையும் பொருட்படுத்தாமல் ‘Chhaava’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்தார். இதனால் அவர் நடக்க முடியாத நிலையில், வீல் சேரில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.





Source link