[ad_1]

Last Updated:

சசிகுமாரின் ‘மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சசிகுமார், சைத்ரா பீடியுடன் தோன்றும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

News18

சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ எதிர்மறை விமர்சனங்களால் தோல்வியை தழுவியது. இந்தப் படத்தை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நடிக்கிறார்.

இதில், கன்னடத்தில் வெளியான சப்தசாகரதசே எல்லோ படத்தில் நடித்த சைத்ரா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘மை லார்ட்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொறுத்தவரை மிகவும் எளிய மனிதர்களை பிரதிபலிக்கும் வகையில் சசிகுமார், சைத்ரா தோற்றம் இடம்பெற்றுள்ளது. இருவரும் பீடியை பிடித்துக்கொண்டிருக்கும் வகையில் இருக்கும் போஸ்டரின் பின்புறம் டிவிஎஸ் 50 வண்டியும் இடம்பெற்றுள்ளது. படத்தின் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

[ad_2]

Source link