Last Updated:

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி ஸ்மார்ட் ஃபோன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸுடன் கூடிய 6.7-இன்ச் HD+ ஸ்கிரீனைக் கொண்டுள்ளது.

News18News18
News18

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் தனது ஸ்மார்ட் 9 ஹெச்டி மொபைலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு சில நாடுகளில் இந்த மொபைல் வெளியிடப்பட்டது. இறுதியாக தற்போது இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிறுவனத்தின் இந்த புதிய டிவைஸ் அதன் ஸ்மார்ட் 9 லைன்அப்-ல் முதல் ஸ்மார்ட்ஃபோன் ஆகும். மேலும் இது டிசம்பர் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் 8 HD-ன் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய 6.7-இன்ச் HD+ ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. சிறந்த மீடியா எக்ஸ்பீரியன்ஸை வழங்க டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் DTS ஆடியோ ப்ராசஸிங்கைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் இன்ஃபினிக்ஸின் Smart 9 HD மொபைலின் விலை:

இந்த மொபைலின் விலை இந்தியாவில் ரூ.6,699ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறப்பு ஒரு நாள் சலுகையின் ஒரு பகுதியாக ரூ.6,199-க்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மொபைலை வரும் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட்டில் வாங்கலாம். மின்ட் கிரீன், கோரல் கோல்ட், நியோ டைட்டானியம் மற்றும் மெட்டாலிக் பிளாக் உள்ளிட்ட 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Smart 9 HD மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி ஸ்மார்ட் ஃபோன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸுடன் கூடிய 6.7-இன்ச் HD+ ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. இந்த மொபைலில் DTS ஆடியோ ப்ராசஸிங் மற்றும் சவுண்ட் பூஸ்ட் டெக்னலாஜியுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மொபைல் 165.7 x 77.1 x 8.35 மிமீ டைமென்ஷன் மற்றும் 188 கிராம் எடையைக் கொண்டிருக்கிறது.

இதையும் படிக்க: ஐபோன் யூசர்களுக்கு குட் நியூஸ்… இனி ஒரே சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும்…!

இந்த புதிய மொபைலில் 2.2GHz பீக் க்ளாக் ஸ்பீடுடன் கூடிய ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G50 ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சிப்செட் 6GB வரையிலான ரேம் (3GB பிஸிக்கல் + 3GB விரிச்சுவல்) மற்றும் 64GB ஆன்போர்ட் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 1TB வரை இன்டர்னல் ஸ்டோரேஜை விரிவாக்கிக் கொள்ளலாம். Android 14 Go வெர்ஷனில் இயங்கும் இந்த மொபைலின் பின்பக்கம் குவாட் LED மற்றும் ஜூம் ஃபிளாஷ் கொண்ட 13-MP டூயல் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கிறது.

இந்த மொபைல் செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 8MP ஃப்ர்ன்ட் கேமராவையும், LED ஃபிளாஷ் மற்றும் ஸ்கிரீன் ஃபிளாஷ் அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 14.5 மணி நேர வீடியோ பிளேபேக் மற்றும் 8.6 மணி நேர கேமிங் டைமிங்கை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: எச்சரிக்கை…! வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தை பயன்படுத்தினால் நீங்கள் சிக்கலில் மாட்டலாம்…

தவிர நிறுவனம் இந்த மொபைலில் AI சார்ஜ் ப்ரொட்டக்ஷன் அம்சத்தை வழங்கியுள்ளது. இது டிவைஸை அதிக சார்ஜ் செய்வதில் இருந்து பாதுகாக்கும் மற்றும் பேட்டரியின் ஆரோக்கியத்தை நீடிக்கச் செய்யும் என கூறப்படுகிறது. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த மொபைலில் இருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5 மி.மீ. ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்டவை அடங்கும்.



Source link